வடமாநில பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்றிய குரங்குகள்! வைரலாகும் வீடியோக்கள்


வடமாநில பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்றிய குரங்குகள்! வைரலாகும் வீடியோக்கள்
x
தினத்தந்தி 17 Aug 2017 8:09 AM GMT (Updated: 17 Aug 2017 8:09 AM GMT)

ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் பள்ளியில் தேசியக் கொடியை குரங்குகள் ஏற்றிய வீடியோவானது வைரலாக பரவி வருகிறது.


புதுடெல்லி,


 நாட்டின் 71-வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றுபவர்கள் கொடியை மாற்றி ஏற்றியும், முறையாக மரியாதை செலுத்தாமலும், செல்போன் பேசியப்படி கொடியை ஏற்றியும் விமர்சனத்திற்கு உள்ளாவார்கள். இந்த சுதந்திர தினவிழாவில் இரு பள்ளிகளில் குரங்குகள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து உள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் புஷ்காரில் சுதந்திர தினவிழா அன்று காலையில் பள்ளியில் கொடி ஏற்ற தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டது. ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சுதந்திர தின விழாவில் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த அணிவித்து நின்ற போது, கொடியை சிறாப்பு விருந்தினருக்கு பதிலாக அப்பகுதியை சேர்ந்த குரங்கு ஒன்று ஏற்றிவைத்தது. குரங்குகள் கொடியை ஏற்றியதும், மலர்கள் பொழிந்தது. மாணவர்கள் மரியாதை செலுத்தினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் காலை 8 மணியளவில் நேரிட்டது. வீடியோவில் மாணவர் கைகளை தட்டி, சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. புஷ்கார் இந்தியாவில் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும், அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது, அதிகமான குரங்குகள் இங்கு உள்ளது.

இதேபோன்று அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள பள்ளியிலும் குரங்கு ஒன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாக பரவி வருகிறது சமூக வலைதளங்களில்... மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் மரியாதை செலுத்தினர். 


Next Story