சசிகலாவை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை - தம்பிதுரை பரபரப்பு பேட்டி


சசிகலாவை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை - தம்பிதுரை பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 17 Aug 2017 12:55 PM GMT (Updated: 17 Aug 2017 12:55 PM GMT)

பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என தம்பிதுரை கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியார்களிடம் கூறியதாவது:

அதிமுக அணிகள் இணைந்து செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை விசாரணை ஆணையம் நீக்கும்.

பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. கருத்து வேற்றுமைகளை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கட்சியை சிறப்பாக வழிநடத்தி நல்லாட்சியை கொடுக்க வேண்டும்.

ஓபிஎஸ் அணி சார்பில் நீதி விசாரணை தானே கேட்டார்கள். ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என்று நம்புகிறேன். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கின்ற வகையிலேயே முதல்-அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பில் எங்களுக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்க வேண்டியதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story