ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி


ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Aug 2017 3:00 PM GMT (Updated: 17 Aug 2017 3:00 PM GMT)

ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னால் ஆன பங்களிப்பை நிச்சயம் செய்வார்கள் என நம்புகிறேன்.
ஊழல் நிறுவமனமயமாக்கப்பட்டுள்ளது நாட்டின் துரதிர்ஷ்டம். இதற்கு எதிர்-நிறுவன ஏற்பாடுகளை செய்யாவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது. இடைத்தரகர்களுக்கு இப்போது வேலையில்லை, இவர்கள்தான் வேலையின்மை என்று தற்போது கூக்குரலிடுகின்றனர்.

அரசும் அதன் முயற்சிகளும் மட்டுமே புதிய இந்தியாவைப் படைக்க போதுமானதல்ல. மாற்றம் என்பது ஒவ்வொரு குடிமக்களிடமிருந்தும் வர வேண்டும்.முன்பு பத்ம விருதுகள் எப்படி அளிக்கப்பட்டு வந்தன? நாங்கள் ஒரு ‘சிறிய’ மாற்றம்தான் கொண்டு வந்தோம், விருதுகளுக்கு மக்கள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம். இது கடந்த காலத்தில் இல்லை.மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்கிவிட முடியாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனது செயல்பாடுகளால் புதிய இந்தியாவை உருவாக்கிட முடியும்” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Next Story