புதிய ரூ.200 நோட்டுக்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு


புதிய ரூ.200 நோட்டுக்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு
x
தினத்தந்தி 23 Aug 2017 9:01 AM GMT (Updated: 23 Aug 2017 9:01 AM GMT)

புதிய ரூ.200 நோட்டுக்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.


புதுடெல்லி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, பழைய 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு, மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அரசு தயாராகிவருவதாக சில நாள்களுக்கு முன்னர் தகவல் கசிந்தது.

இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்துவது போல 50 மற்றும் 200 ரூபாய் போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், மத்திய அரசு 200 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது. புதிய ரூ.200 நோட்டுக்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு  மேலும், இந்த 200 ரூபாய் நோட்டுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த மாத ஆரம்பித்திலோ புழக்கத்துக்கு வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

Next Story