தாஜ்மஹால் மட்டும் ஏன்? ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டையையும் இடித்துவிடலாம் - அசாம் கான் சொல்கிறார்


தாஜ்மஹால் மட்டும் ஏன்? ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டையையும் இடித்துவிடலாம் - அசாம் கான் சொல்கிறார்
x
தினத்தந்தி 17 Oct 2017 9:40 AM GMT (Updated: 17 Oct 2017 9:48 AM GMT)

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அசாம் கான் ஜனாதிபதி மாளிகை மற்றும் செங்கோட்டையை இடிக்க அழைப்பு விடுத்து உள்ளார்.

லக்னோ, 

ராஷ்டிரபதி பவன், குதுப் மினார் மற்றும் செங்கோட்டையும் அடிமை தனத்தின் சின்னம்தான் அவைகளையும் அழித்துவிடலாம் என சமாஜ்வாடியின் அசாம் கான் கூறிஉள்ளார்.

பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில், “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது.

தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையை வரலாறு எனக் கொண்டாடுவதா?” என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே உத்தரபிரதேச மாநில யோகி ஆதித்யநாத் அரசு மாநில சுற்றுலாவிற்கான வழிகாட்டியில் இருந்து தாஜ்மஹாலை நீக்கியது பெரும் சர்ச்சையாக்கியது. 

இதற்கிடையே சங்கீத் சோம் பேச்சும் சர்ச்சையை அதிகரிக்க செய்தது. இவ்விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில அரசு சங்கீத் சோம் கருத்தில் இருந்து விலகிக்கொண்டது. 

இந்நிலையில் சமாஜ்வாடியில் சர்ச்சைக்கு பெயர்போன அசாம் கான், ராஷ்டிரபதி பவன், குதுப் மினார் மற்றும் செங்கோட்டையும் அடிமைதனத்தின் சின்னம்தான் அவைகளையும் அழித்துவிடலாம் என கூறிஉள்ளார். 

அசாம் கான் பேட்டியளித்து பேசுகையில், “தாஜ்மஹால் மட்டும் துரோகிகளால் கட்டப்பட்டது என சொல்கிறீர்கள்? ஜனாதிபதி மாளிகை, குதுப் மினார் மற்றும் செங்கோட்டையை கட்டியது யார்? இவையும் அடிமைத்தனத்தின் சின்னம்தான். இவற்றை துரோகிகளின் அடையாளம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கூறுகிறது, அப்படியிருந்தால் தாஜ்மஹாலை இடிக்கவேண்டும்,” என கூறிஉள்ளார்.

அடிமைத்தனத்தைக் குறிக்கும் நினைவுச் சின்னங்கள் அனைத்தையும் அழிக்கவே அழைப்பு விடுக்கின்றேன் எனவும் பேசிஉள்ளார் அசாம் கான். 

Next Story