நடனம் ஆடுவது மோடி தாயார் அல்ல போலி வீடியோ வெளியிட்ட கிரண்பேடி


நடனம் ஆடுவது மோடி தாயார் அல்ல போலி வீடியோ வெளியிட்ட கிரண்பேடி
x
தினத்தந்தி 20 Oct 2017 9:34 AM GMT (Updated: 20 Oct 2017 9:34 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், நடனம் ஆடி தீபாவளி கொண்டாடும் வீடியோ போலி வீடியோ வெளியிட்ட கவர்னர் கிரண்பேடி

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், நடனம் ஆடி தீபாவளி கொண்டாடும்  வீடியோவை, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் இருப்பது நம் பிரதமர் நரேந்திர மோடியின் 97 வயது தாயார். இந்த முதிர் வயதிலும் உற்சாகமாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியுள்ளார் என்று கிரண் பேடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராமென் மோடி நடனமாடுவது போன்ற வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.

வீடியோவில் உள்ள வயதான பெண் பிரதமர் மோடியின் தாயார் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

Spirit of Deepavali at tender age of 97. She's mother of @narendramodi (Hiraben Modi -1920) celebrating Diwali at her own home👇🏼@SadhguruJVpic.twitter.com/HBXAzNXomC

— Kiran Bedi (@thekiranbedi) October 20, 2017

Next Story