சோலார் பேனல் மோசடி விசாரணை அறிக்கை நவம்பர் 9- ந்தேதிக்கு பிறகு வெளியிடப்படும்


சோலார் பேனல் மோசடி விசாரணை அறிக்கை நவம்பர் 9- ந்தேதிக்கு பிறகு வெளியிடப்படும்
x
தினத்தந்தி 20 Oct 2017 10:35 AM GMT (Updated: 20 Oct 2017 10:35 AM GMT)

சோலார் பேனல் மோசடி விசாரணை அறிக்கை நவம்பர் 9- ந்தேதி கேரள சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்படும் என தெரிகிறது.

 திருவனந்தபுரம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார்.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

 உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு  பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒரு போக பொருளாகத்தான் கருதினர்.

அதில், நானும் பலிகடா ஆக்கப்பட்டேன். இது குறித்து நான் விசாரணை குழு தலைவராக இருந்த ஏடிஜிபி ஹேமச்சந்திரனிடம் கூறினேன். ஆனால், அது குறித்து விசாரணை நடத்த முடியாது என்று ஹேமச்சந்திரன் கூறிவிட்டார். நான் திருவனந்தபுரம் சிறையில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கணேஷ்  குமாரின் உதவியாளர் மாறுவேடத்தில் என்னை வந்து சந்தித்தார். அப்போது, உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள் மீது புகார் கூறக் கூடாது என்று என்னிடம் கூறினார்.

வாரண்ட் இல்லாமல் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்கு தெரியாமலே என் வீட்டில் சோதனை நடத்தி லேப்டாப்,  செல்போன்களை கைப்பற்றி சென்றனர். அப்போது எர்ணாகுளம் ஐஜியாக இருந்த பத்மகுமார் என் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த வீடியோக்களை வௌியே விட்டார். எனவே, சோலார் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ளபடி உம்மன்சாண்டி உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

இந்த  நிலையில்  சர்ச்சைக்குரிய சோலார் ஊழல் அறிக்கைய பொதுமக்களுக்கு தெரியபடுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. வருகிற நவம்பர் 9 ந்தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்படும் என தெரிகிறது.

அறிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணபிக்கபட்டு உள்ளது. சோலார்  மோசடி அறிக்கையின் நகல் ஒன்றை கோருவதற்காக  தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அறிக்கையை  தாக்கல் செய்ய 30 நாள் காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாகவே இது வந்துள்ளது.

சோலார் பேனல் மோசடி அறிக்கை  சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் வரையில், பொதுமக்கள் முன்னிலையில் வைக்கபடமாட்டாது  என முன்னதாக பினராயி அரசாங்கம் மறுத்துவிட்டது.

தலைமை செயலாளருக்கு இதுபோல்  தகவல் அறியும் உரிமை மனு செய்யபட்டு உள்ளது. அமைச்சரகம் ஒரு சட்ட  வல்லுனர்களிடம், விரிவான சட்ட ஆலோசனையை கேட்டு உள்ளது.

முதல்வர் பிரணாய் விஜயன்,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி  அர்ஜீத் பசாயத்அர்ஜீத் பசாயத், கேரள உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆகியோரிடம், நீதிபதி சிவராஜன் கமிஷனின் பரிந்துரைகள் சட்டபூர்வமானதா? என ஆலோசனை நடத்தி உள்ளார்.

Next Story