ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது


ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது
x
தினத்தந்தி 20 Nov 2017 4:00 PM GMT (Updated: 20 Nov 2017 4:00 PM GMT)

ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.


புதுடெல்லி, 


நாட்டிடம் இருந்து ராணுவ தளவாடங்களை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2014-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க இஸ்ரேல் அரசின் ரபேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ரேதியான் லாக்கீட் மார்ட்டின் என்ற நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டது. இறுதியில் ஒப்பந்தம் இஸ்ரோல் உடன் மேற்கொள்ளப்பட்டது. 

இரவிலும், பகலிலும் பயன்படுத்தக்கூடிய ‘ஸ்பைக்’ ஏவுகணைகள் பாகிஸ்தான் ராணுவத்தை சமாளிக்க உகந்தவை என்று இந்திய ராணுவம் கருதியது. 

இஸ்ரேல் நிறுவனத்திடம் 8 ஆயிரம் ‘ஸ்பைக்’ ஏவுகணைகளையும், 300 லாஞ்சர்களையும் வாங்க முடிவு செய்யப்பட்டது. இப்போது திடீர் திருப்பமாக ரூ.3,250 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.  பதிலாக ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திடம் (டி.ஆர்.டி.ஓ.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது என செய்தி வெளியாகி உள்ளது. ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை.  

‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி, ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளுமாறு இந்தியா அறிவுறுத்தியதை இஸ்ரேல் நிறுவனம் ஏற்க மறுத்து விட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏவுகணை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இருநாட்டு உறவு பாதிக்கப்படும் நிலை எழுந்து உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜனவரி 14–ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.  

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் நாக் மற்றும் அனாமிகா ஏடிஜிஎம்களை வெற்றிகரமாக வழங்கி உள்ளது. எனவே ஸ்பைக் போன்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகளையும் மூன்று, நான்கு வருடங்களுக்குக்குள் வழங்க முடியும் என நம்பிக்கை கொண்டு உள்ளது. எந்த தொழில்நுட்பம் மாற்றமும் தேவையில்லை என தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவின் டாங்கிகள் மற்றும் பதுங்கு குழிகளை குறிவைக்கும் வகையில் சீன மற்றும் அமெரிக்க தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இவைகளால் 3, 4 கிலோ மீட்டர் தொலைவை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள முடியும். இந்தியா 4 வருடங்களில் ஏவுகணைகளை தயாரிக்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

Next Story