முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு


முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 21 Nov 2017 10:47 AM GMT (Updated: 21 Nov 2017 10:47 AM GMT)

முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.


புதுடெல்லி, 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்டத்தை கொண்டுவர அல்லது   ஏற்கனவே இருக்கும் சட்ட நடைமுறையில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. 

முத்தலாக் நடைமுறை தவறானதாக இருந்தாலும் இந்த தனிச்சட்டத்தில் கோர்ட்டு தலையிட முடியாது. 6 மாதங்களுக்கு இந்த முத்தலாக் நடைமுறையை நிறுத்தி வைக்கவேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு அளித்து முத்தலாக் நடைமுறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும். ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான சட்டத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை என்றால் அரசாங்கம் சட்டத்தை இயற்றும் வரை முத்தலாக் மீதான தடை தொடரும்.

 மேலும் அரசாங்கம் கொண்டு வரும் சட்டம் ‌ஷரியத் சட்டத்தையும் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் அமையவேண்டும் என்றது சுப்ரீம் கோர்ட்டு.

இந்நிலையில் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் புதிய சட்டத்தை குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்து உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. உடனடியாக முத்தலாக் சொல்லப்பட்டு விவகாரத்து செய்யும் முறையினால் பாதிக்கப்படும் பெண்கள் போலீசை நாட முடியவில்லை, தண்டனைக்குரிய விதிகள் இல்லாததால் தவறு செய்கின்ற கணவர்களுக்கு எதிராக அவர்களால் எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கமுடியவில்லை. இத்தகையை பிரச்சனையை தீர்க்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story