செவிலியர்கள் பிரசவம் பார்க்க மறுப்பு மருத்துவமனை கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்ற பெண்


செவிலியர்கள் பிரசவம் பார்க்க மறுப்பு மருத்துவமனை கழிவுநீர் கால்வாயில் குழந்தை பெற்ற பெண்
x
தினத்தந்தி 16 Dec 2017 10:25 AM GMT (Updated: 16 Dec 2017 10:25 AM GMT)

ஒடிசாவில் பிரசவத்திற்கு செவிலியர்கள் மறுப்பு தெரிவித்ததால் மருத்துவமனையின் கழிவுநீர் கால்வாயில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் ஜானுகுடா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் கோரபுட் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது கணவருக்கு உதவியாக இருந்து வந்தார். 

இந்நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவனையில் உள்ள செவிலியர்களைசந்தித்து பிரசவலி ஏற்பட்டதாக  கூறியுள்ளார். அப்போது அரசு சார்பில் வழங்கப்படும் தாய் சேய் நல பதிவு அட்டையை அவர்கள் கேட்டுள்ளனர்.  

கணவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக இருப்பதாக  செவிலியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து பிரசவம் பார்க்க மறுத்துள்ளனர்.

இதனால்  செய்வது அறியாது வலியால் துடித்த அந்த நிறைமாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் உள்ள வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத கழிவுநீர் வடிகாலில் இறங்கி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story