பாரதீய ஜனதாவுடனான 29 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டது சிவசேனா


பாரதீய ஜனதாவுடனான 29 ஆண்டு கால கூட்டணியை முறித்துக்கொண்டது சிவசேனா
x
தினத்தந்தி 23 Jan 2018 7:19 AM GMT (Updated: 23 Jan 2018 7:19 AM GMT)

வரும் 2019-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தனித்துப்போட்டியிடுவதகா சிவசேனா அறிவித்துள்ளது. #ShivSena | #bjp

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியுடன் நீண்ட காலம் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி  வரும் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக பாஜகவுடனான கூட்டணி உறவில் கசப்புணர்வு அதிகரித்து வந்தது. இதையடுத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து சிவசேனா கட்சி விமர்சித்து வந்தது. குறிப்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் மத்திய அரசின்  கொள்கைகளை விமர்சித்தும் பிரதமர் மோடியின் திட்டங்களை விமர்சித்தும் தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளியாகி வந்தது. 

இந்த நிலையில், சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும் பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், பாரதீய ஜனதாவுடனான  29 ஆண்டு கால கூட்டணியை சிவசேனா முறித்துக்கொண்டுள்ளது.  #ShivSena | #bjp | #lokhsaba

Next Story