‘பெண் மைனராக இருந்தாலும் விருப்பப்பட்டு ஒருவருடன் சென்றால் கடத்தப்பட்டதாக கூற முடியாது’ மும்பை ஐகோர்ட்டு கருத்து


‘பெண் மைனராக இருந்தாலும் விருப்பப்பட்டு ஒருவருடன் சென்றால் கடத்தப்பட்டதாக கூற முடியாது’ மும்பை ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 8 Jan 2017 10:36 PM GMT (Updated: 8 Jan 2017 10:36 PM GMT)

‘‘பெண் மைனராக இருந்தாலும் விருப்பப்பட்டு ஒருவருடன் சென்றால் கடத்தப்பட்டதாக கூற முடியாது’’ என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது. மைனர் பெண் ஓட்டம் மும்பை ஐகோர்ட்டில் சாகர் தாம்பே என்ற வாலிபர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நானும், மைனர் பெண

மும்பை,

‘‘பெண் மைனராக இருந்தாலும் விருப்பப்பட்டு ஒருவருடன் சென்றால் கடத்தப்பட்டதாக கூற முடியாது’’ என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மைனர் பெண் ஓட்டம்

மும்பை ஐகோர்ட்டில் சாகர் தாம்பே என்ற வாலிபர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நானும், மைனர் பெண் ஒருவரும் காதலித்தோம். எங்களது காதலுக்கு அவளது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நாங்கள் வீட்டைவிட்டு ஓடினோம். பின்னர் அவளுக்கு 18 வயது ஆன பிறகு திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம்.

இந்தநிலையில் எனது மனைவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் என் மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனது மனைவி மைனர் ஆக இருந்த போதும் விரும்பியே என்னுடன் வந்தார். அவரும் இதை பலமுறை கூறியுள்ளார். எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிவேண்டும் என அதில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டு கருத்து

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஒரு பெண் மைனராக இருந்தாலும், அவர் முடிவு எடுக்க கூடிய வயது முதிர்ச்சி பெற்ற நிலையில் அவள் தான் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே பெற்றோரையோ அல்லது காப்பாளர்களையோ விட்டு வேறு ஒரு ஆணுடன் சென்றால், அந்த ஆண் அந்த பெண்ணை கடத்திச்சென்றார் என கூற முடியாது’’ என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story