அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழக கட்சி உதயம்


அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழக கட்சி உதயம்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:15 AM GMT (Updated: 17 Jan 2017 9:15 AM GMT)

அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி தொடக்கப்பட்டுள்ளது.

சென்னை,


இந்த கட்சியின் கொடி அறிமுக கூட்டம் சென் னையில் நடந்தது. அப் போது கட்சியின் நிறுவன தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர் களாக இருந்த நாங்கள் தென்னக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை நடத்தி வந்தோம். இதில் 40 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை வழி நடத்தி செல்ல சரியான தலைமை இல்லை. சசிகலா  தலைமையை ஏற்க எங்களுக்கு விருப்பம் இல்லை.
அதனால் எம்.ஜி.ஆர் 100-வது பிறந்தநாளையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர். திராவிட முன் னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளோம்.

கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளை கடைபிடித்தல், மாவட்டந்தோறும் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தல், ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை அனைவருக்கும் இலவசமாக கிடைக்க செய்தல் போன்ற கொள்கை குறிகோள்கள் வகுக்கப்பட்டு உள்ளது.  கட்சிக்கு பொதுச் செயலாளராக தங்க மாரியப்பன், பொருளாளராக கருணாநிதி  ஆகியோர் செயல்படுகின்றனர்.

கருப்பு, வெள்ளை, சிகப்பு ஆகிய வண்ணங்கள் அடங்கிய கட்சி கொடி நடுவே அண்ணா, எம்.ஜி.ஆர், உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  

Next Story