ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் விஜய்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்: நடிகர் விஜய்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:52 PM GMT (Updated: 17 Jan 2017 3:52 PM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தாமாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழ் திரையுலகை சார்ந்த பிரமுகர்கள் பலர் நேரில் சென்று வாழ்த்து  தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் விஜய் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் சட்டத்தை உருவாக்கியது மக்களோட கலாச்சாரத்தையும், உரிமையையும் பாதுகாக்கத்தான். பறிப்பதற்காக அல்ல. தமிழர்களோட அடையாளம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதையும் எதிர்பாராமல் அரசியல் தூண்டல் இல்லாமல் தாமாக முன் வந்து போராடும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழன் என்ற உணர்வோடு போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன். போராட்டத்திற்கு காரணமான பீட்டாவை வீட்டுக்கு அனுப்பினால் தமிழகமே சந்தோஷப்படும்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story