அமைச்சர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவினரின் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது


அமைச்சர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவினரின் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது
x
தினத்தந்தி 17 Jan 2017 9:24 PM GMT (Updated: 17 Jan 2017 9:24 PM GMT)

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் 10 பேர் கொண்ட குழுவுடன் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் ஜெயக்குமார் 30 நிமிடங்களுக்கும் மேல் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

சென்னை,

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், அரசை இளைஞர்கள் சந்தேகிக்க கூடாது.  இளைஞர்களின் குரலை மத்திய அரசிடம் எதிரொலிப்போம்.  இளைஞர்கள் போராட்டத்தினை கைவிட வேண்டும் என கூறினர்.

சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதில் நாட்டு மாடு இனங்களை பாதுகாப்போடு வளர்க்க வேண்டும்.

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் குழு தெரிவித்துள்ளது.

Next Story