விவேகானந்தருடைய போதனைகளை பின்பற்றுவதன் மூலம் மனிதநேய சமுதாயத்தை உருவாக்க முடியும் சித்தராமையா பேச்சு


விவேகானந்தருடைய போதனைகளை பின்பற்றுவதன் மூலம் மனிதநேய சமுதாயத்தை உருவாக்க முடியும் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2017 11:12 PM GMT (Updated: 18 Jan 2017 11:12 PM GMT)

விவேகானந்தருடைய போதனைகளை பின்பற்றுவதன் மூலம் மனிதநேய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

விவேகானந்தருடைய போதனைகளை பின்பற்றுவதன் மூலம் மனிதநேய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

விவேகானந்தர் பிறந்த நாள்

கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் உறுதிமொழி ஏற்பு விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த விழாவை சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:–

விவேகானந்தர் எந்த சாதி, மதத்தையும் சேர்ந்தவர் அல்ல. அதே போல் மதத்தை நிராகரித்தவரும் அல்ல. மதத்தில் இருந்து கொண்டே அதை விமர்சித்து பேசினார். அவர் வாழும் நெறிகளை கற்று கொடுத்தார். சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் சமுதாயம் பிளவுபடக்கூடாது. எல்லா நம்பிக்கையும் உள்ள மதங்கள் ஒற்றுமையாக வாழும் சூழல் இருக்க வேண்டும்.

மனிதத்துவத்துக்கு அதிக அழுத்தம்

அதன் மூலம் நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார். அதற்காகவே இந்தியாவுக்கு வேதாந்த மூளையும், இஸ்லாம் மதத்தின் உடலும் வேண்டும் என்று சொன்னார். மதங்களை விட மனிதத்துவத்துக்கு அதிக அழுத்தம் கொடுத்தார். முதலில் மனிதன், அதன் பிறகே மதம் என்று உறுதிபட சொன்னவர்.

விவேகானந்தர் போதித்த போதனைகள் இன்றும் உயிருடன் உள்ளன. அவைகளை நாம் நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். மனிதநேய சமுதாயத்தை அவருடைய போதனைகளை பின்பற்றுவதன் மூலம் உருவாக்க முடியும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இதில் உயர்கல்வித்துறை மந்திரி பசவராஜ் ராயரெட்டி, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், தொழில் துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story