அவசர சட்டம் பிறப்பிக்காவிட்டால் தடையை மீறி 26-ந்தேதி ஜல்லிக்கட்டு அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு


அவசர சட்டம் பிறப்பிக்காவிட்டால் தடையை மீறி 26-ந்தேதி ஜல்லிக்கட்டு அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2017 9:12 AM GMT (Updated: 19 Jan 2017 9:12 AM GMT)

அவசர சட்டம் பிறப்பிக்காவிட்டால் தடையை மீறி 26-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் விருப்பம்.

பா.ம.க. எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும்.
மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு  அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26-ந் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் மாண வர்களும்,  இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Next Story