சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது


சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 23 Jan 2017 12:00 PM GMT (Updated: 23 Jan 2017 12:02 PM GMT)

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடியது இதில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேற்றபட்டது.

சென்னை

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு  கூடியது. இந்த கூட்டத்தில், முதல்- அமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்- அமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு நேரில் வந்து பார்வையாளர்களாக பார்வையிட்டனர்.


Next Story