ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் தொடர்பான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில் என்ன?


ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் தொடர்பான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில் என்ன?
x
தினத்தந்தி 20 Feb 2017 2:27 PM GMT (Updated: 20 Feb 2017 2:26 PM GMT)

ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு புறப்படுவதற்கு முன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். அப்போது மும்முறை சமாதியில் கையால் அறைந்து சபதம் எடுத்தார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எடுத்த சபதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில்,
 
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 வருடம் சிறை தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார், கோபத்தின் விளிம்பில் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுதொடர்பாக எல்லாம் விளக்கம் அளிக்கமுடியுமா? அதுவும் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்ற இருந்த நிலையில் நேரிட்டது. ஒரு நாள் முதல்-அமைச்சர் ஆன பின்னர் சிறைக்கு சென்று இருந்தால் அங்கு முதல் வகுப்பு கிடைத்து இருக்கலாம். அதனால் ஆத்திரம் இருந்து இருக்கலாம் என்றார். 

Next Story