ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகள் விவரம்


ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பாளர்களின் சொத்துகள் விவரம்
x
தினத்தந்தி 24 March 2017 8:32 AM GMT (Updated: 24 March 2017 8:32 AM GMT)

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துகள் விவரம் வருமாறு:-

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர் தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. உடைந்து 3 பிரிவுகளாக போட்டியிடுகிறது. தி.மு.க., பா.ஜனதா, தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமத்துவமக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங் களது சொத்து கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர். அசை யும் சொத்து, அசையா சொத்து, மனைவி பெயரில் உள்ள சொத்து, தங்க நகை, கடன் போன்ற விவரங்களை கொடுத்துள்ளனர். கட்சிகள் வாரியாக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வரு மாறு:-

சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தின கரன் 2 வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இதில் எழும்பூரில் உள்ள கார்ப்பரேஷன் வங்கி கிளையில் ஒரு லட்சத்து 234 ரூபாயும், ஸ்டேட் வங்கி  பாராளுமன்ற கிளையில் ரூ.36, 570 இருப்பாக உள்ளன.

கார்ப்பரேஷன் வங்கி எழும்பூர் கிளையில் வைப்பு நிதியாக ரூ.2.43 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். ஸ்டேட் வங்கியின் சென்னை சாஸ்திரி நகர் கிளையில் பொது சேம நல கணக்கில் ரூ.6.49 லட்சம் வைத்துள்ளார். இவரது மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.11 லட்சத்து 45 ஆயிரத்து 781 ஆகும்.

பூர்வீக சொத்துகள் இல்லை. சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாறு கற்பகம் கார்டன் வெங்கடேஸ்வரா நகர் 4-வது தெருவில் மனைவியுடன் வாங்கிய 8726 சதுர அடி பரப்பளவு மனையில் டி.டி.வி.தினகரனின் பங்கு 3,124 சதுர அடியாகும். இந்த நிலத்தில் 7500 சதுர அடி பரப்பளவில் இவரது பங்கு 3750  சதுர அடியாகும். இந்த சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.57.44 லட்சம் ரொக்க இருப்பாக ரூ.16,328 மட்டுமே உள்ளது.

இவரது மனைவி அனுராதா பெயரில் கார்ப்பரேஷன் வங்கி சாஸ்திரிநகர் கிளையில் ரூ.7.53 லட்சம், எழும்பூர் கிளையில் ரூ.20.52 லட்சம் ஸ்டேட் வங்கி அடையாறு கிளையில் ரூ.1.51 லட்சம் டெபாசிட் உள்ளது.

இது தவிர யூனியன் வங்கி மற்றும் குயிலிப்பாளையம் ஸ்டேட் வங்கி கிளையில் சுமார் ரூ.13,000 டெபாசிட் உள்ளது. இது தவிர ஒரு கிலோ 48 கிராம் எடையுள்ள தங்க நகைகளும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 37 கிராம் வைர நகைகளும் வைத்துள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமாக இருசக்கர வாகனம், கார் எதுவும்  இல்லை. ஆனால் மனைவி பெயரில் டாடா சபாரி கார் உள்ளது. திண்டிவனம் அடுத்த வானூர் பொம்மையார் பாளையத்தில் 561 சென்ட் நிலத்தில் 13,027 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1.73 கோடி. இது தவிர ரூ.5.4 கோடிக்கு கடன் உள்ளது. அவரது மகள் பெயரில் ரூ.49.55 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ரூ.18 லட்சத்து 89 ஆயிரத்து 676-க்கு அசையும் சொத்துக்களும், மனைவி ஜீவா பெயரில் ரூ.51 லட்சத்து 72 ஆயிரத்து 658 சொத்து மதிப்பும் உள்ளன.  அனைத்து நிலம், புலம் உள்பட மதுசூதனன் பெயரில் ஒரு கோடியே 37 லட்சம் அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் 3 கோடியே 30 லட்சம் அசையா சொத்துக்களும் உள்ளன.

தி.மு.க. வேட்பாளர் மருது  கணேசின் அசையும் சொத்து மதிப்பு ரூ.2 லட்சத்து 79 ஆயிரத்து 531. மனைவி பெயரில் ரூ.7 லட்சத்து 8606 உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதனின்  சொத்து மதிப்பு ரூ.6.05 லட்சமாகும்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா சொத்து மதிப்பு : அசையும் சொத்து - ரூ.1.05 கோடி, அசையா சொத்து - ரூ.2 கோடியாகும்.


Next Story