தமிழகத்தில் 30-ந் தேதி முதல் 9 லட்சம் லாரிகள் ஓடாது


தமிழகத்தில் 30-ந் தேதி முதல் 9 லட்சம் லாரிகள் ஓடாது
x
தினத்தந்தி 24 March 2017 10:15 PM GMT (Updated: 24 March 2017 7:43 PM GMT)

30-ந் தேதி முதல் தமிழகத்தில 9 லட்சம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் குமாரசாமி கூறினார்.


சென்னை,

தமிழக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவா் குமாரசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

காப்பீடு தொகை உயா்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை உயா்த்தியதை கண்டித்தும் 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

9 லட்சம் லாரிகள்

தமிழகம் முழுவதும் 42 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 26 சுங்கச்சாவடிகளில் செலவு செய்த தொகை முழுவதையும் வசூல் செய்துவிட்ட பின்னரும் தொடர்ந்து வசூலித்து வருகிறார்கள். வேலைநிறுத்த போராட்டத்தால் 30-ந் தேதி முதல் தமிழகத்தில் 9 லட்சம் லாரிகள் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story