எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபாவுக்கு படகு சின்னம்


எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபாவுக்கு படகு சின்னம்
x
தினத்தந்தி 27 March 2017 11:32 AM GMT (Updated: 27 March 2017 11:32 AM GMT)

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வேட்பாளர் தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது



சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சிகள் அனைத்தும் தீவிர பிர சாரத்தில் இறங்கி விட்ட நிலையில் எம்.ஜி.ஆர்- அம்மா-தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இதுவரை பிரசா ரத்தில் இறங்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தீபா 3 சின்னங்களை விரும்பி கேட்டுள்ளார். ஒன்று திராட்சை கொத்து. இந்த சின்னத்தை விரும்ப காரணம் இரட்டை இலைகளுடன் திராட்சை தொங்குவது போல் இருக்கும். அது ஜெயலலிதாவின் இரட்டை இலையை நினைவுபடுத்தும் என்று கருதுகிறார்.அடுத்தது பேனா. தீபா ஜெயலலிதாவின் சொத்துக்கள் எதுவும் வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனா மட்டுமே போதும் என்று கூறி வருகிறார். அதை நினைவுபடுத்தும் வகையில் பேனா மீது ஆர்வம் காட்டுகிறார்.

அடுத்தது படகு. இந்த சின்னத்தை விரும்ப காரணம் ஆர்.கே.நகர் மீனவர்கள் நிறைந்த பகுதி. தீபாவின் தந்தையும் இறால் ஏற்றுமதி தொழில் செய்தவர். எனவே படகு மீது ஆர்வம் காட்டுகிறார்.

இந்த் நிலையில் இன்று தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 6 மணிக்கு தீபா பிரசாரத்தை தொடங்குகிறார். தனது சின்னத்தை அறிமுகப்படுத்தி பிரசாரத்தை தொடங்குகிறார்.

Next Story