விவசாயிகள் போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி


விவசாயிகள் போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி
x
தினத்தந்தி 28 March 2017 6:09 AM GMT (Updated: 28 March 2017 6:09 AM GMT)

மத்திய அரசை மட்டும் குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன? போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? என மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 15 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உடனடியாக தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலைக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் டெல்லியில் திரண்டுள்ள விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை முன்னெ டுத்து செல்கிறார்கள்.

கழுத்தில் தூக்கு கயிற்றை தொங்க விட்டு போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சடலமாக நடித்து காட்டியும் தங்களது  எதிர்ப்பை தெரிவித்தனர். சாப்பாட்டுக்கு கூட தங்களுக்கு வழியில்லை என்பதை உணர்த்தும் வகையில் எலிக்கறி சாப்பிட போவதாக கூறிய விவசாயி கள் எலியை வாயில் கவ்வியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2 வாரங் களையும் கடந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டத் துக்கு இளைஞர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கேள்விகளை தனது டிவிட்டர் மூலம் எழுப்பியுள்ளார். அதில் காரிஃப் பயிர் நிலைமை குறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை மத்திய அரசிற்கு தந்திருக்க வேண்டும். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்திய அரசை மட்டும் குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன? போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? எனக் பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.



Next Story