இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2017 7:40 PM GMT (Updated: 25 April 2017 7:39 PM GMT)

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பல்கிஸ்பானு.

சென்னை,

குடும்பத்தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து மகன், மகளுடன் மீனாம்பாள் நகரில் வசித்து வந்தார். அப்போது சனாவுல்லா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் தனது மகள் நயும்நிஷா(வயது 23) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க பல்கிஸ்பானு முடிவு செய்தார்.

அப்போது, தனது உறவினரை திருமணம் செய்து கொள்ளும்படி நயும்நிஷாவை, சனாவுல்லா வற்புறுத்தி உள்ளார். அதற்கு நயும்நிஷா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சனாவுல்லா, கடந்த 2013–ம் ஆண்டு நயும்நிஷாவை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை செய்தார்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சனாவுல்லாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைமதி, சனாவுல்லாவுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story