பட்டுக்கோட்டை தொகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்


பட்டுக்கோட்டை தொகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 24 Jun 2017 10:45 PM GMT (Updated: 24 Jun 2017 5:54 PM GMT)

பட்டுக்கோட்டை தொகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என சட்டசபையில் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

சென்னை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ. சட்டசபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்து, தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய வேண்டும். கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள நசுவினி, மகாராஜசமுத்திரம் உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். பட்டுக்கோட்டையில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டவும், பட்டுக்கோட்டை வட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்பி, மயக்க மருந்து நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும். அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 60–க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து விட்டனர். இவர்களுக்கும், ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த ஏழை மீனவ குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story