சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்கு பிறகே இறுதிகட்ட பேச்சுவார்த்தை ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை


சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்கு பிறகே இறுதிகட்ட பேச்சுவார்த்தை ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை
x
தினத்தந்தி 21 Aug 2017 7:17 AM GMT (Updated: 21 Aug 2017 7:17 AM GMT)

சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்கு பிறகே இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்து உள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு  ஏற்பட்டதால் கட்சி அலுவலகம் களை இழந்து காணப்பட்டது. கடந்த 8 மாதங்களாகவே அந்த நிலைதான் நீடித்தது. இன்று 2 அணிகளும் இணையும் நடவடிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதால் தலைமை கழகத்தில் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.

கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். அங்கு திரண்டுள்ள தொண்டர்களின் முகத்தில் பூரிப்பு காணப்பட்டது.

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கும் அ.தி. மு.க. தலைவர்கள் செல்ல இருப்பதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது-. ஜெயலலிதா சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் எடப் பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு  செல்ல இருப்பதாக தகவல்கள்  வெளியாகி இருக்கிறது. இதனால்  ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதற்கு பழனிசாமி அணியினர் தயக்கம் காட்டுவதாக  ஓபிஎஸ் தரப்பு தகவல்  தெரிவிக்கிறது.

Next Story