கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி


கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து: 32 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2017 5:03 AM GMT (Updated: 16 Jan 2017 5:03 AM GMT)

கிர்கிஸ்தானில் சரக்கு விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 விமானிகள் உட்பட 32 பேர் பலியாகினர்.

பிஷ்கேக்,

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் சரக்கு விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 32 பேர் பலியாகினர். மக்கள் நெருக்கம் நிறைந்த அந்த நகரில் கடும் பனிமூட்டம் இன்று நிலவியது. இந்த பனிமூட்டத்துக்கு இடையே தரையிறங்கிய போது தவறுதலாக குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச்சேர்ந்த அந்த விமானம், இஸ்தான்புலில் இருந்து ஹாங்காங்கிற்கு சென்று கொண்டிருந்தது. வழியில் பிஷ்கேக் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. பலியானவர்களில் 4 விமான பைலட்களும் அடங்குவர்.


Next Story