இந்தியரின் கொலைக்கு டிரம்ப் பதில்சொல்ல வேண்டும் ஹிலாரி கிளின்டன் ஆவேசம்


இந்தியரின் கொலைக்கு டிரம்ப் பதில்சொல்ல வேண்டும் ஹிலாரி கிளின்டன் ஆவேசம்
x

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஹிலாரி கிளின்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா என்ற இந்தியர், 51 வயதான அமெரிக்கரான ஆதம் புரின்டன் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா மரணம் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஹிலாரி கிளின்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, நாட்டில் அச்சுறுத்தல்களும் வெறுப்பினவாதக் குற்றங்களும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

இதற்கு நாட்டின் அதிபர்தான் காரணம் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. குற்றங்களை ஒடுக்க வேண்டிய நடவடிக்கைகளை டிரம்ப் முடுக்கிவிடவதோடு, இது குறித்து பதில் சொல்லியாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஸ்ரீனிவாஸ் குச்சிபொட்லா உடல் இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான ஐதராபாத் கொண்டுவரப்பட்டுள்ளது.

Next Story