பைனான்சியர் அன்புசெழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு - 3 தனிப்படைகள் அமைத்து கைது செய்ய தீவிரம் | நாமக்கல்: பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, ரூ.4.85 காசுகளாக விலை நிர்ணயம். | கோவை: சித்தாபுதூரில் உள்ள நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது | ஜெயலலிதா மரணம் - விசாரணை தொடங்கியது | 2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கும் பெரும் பூகம்பங்கள் ஏற்படும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை | பணப்பற்றாக்குறையால் 325 பணிமனைகளில் 286 பணிமனைகள் மற்றும் பேருந்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன - விஜயகாந்த் | கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்களை காப்பாற்ற தயாராக இருக்கிறோம்: விஷால் |

உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை திட்டம் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது - தென் கொரியா + "||" + SECURITY-NKOREA-LEAD MISSILES

வடகொரியாவின் ஏவுகணை திட்டம் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது - தென் கொரியா

வடகொரியாவின் ஏவுகணை திட்டம் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது - தென் கொரியா
வடகொரியாவின் ஏவுகணை திட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் இது அப்பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் தென் கொரியா கூறியுள்ளது.
சியோல்,

சமீபத்திய ஏவுகணை சோதனைகள் வட கொரியாவினால் அமெரிக்காவின் ஒரு சில பகுதிகளை தாக்க ஏதுவாக்கும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்க வெளியுறவு செயலர் டில்லர்சன் சீனாவிற்கு வருகை புரிந்துள்ள சூழலில் புதிய ஏவுகணை சோதனைகள் சீன அமெரிக்க பேச்சுக்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. அமெரிக்கா சீனாவிடம் அதன் நட்பு நாடான வட கொரியாவை கட்டுப்படுத்தும்படி கோரினாலும் சீனா இது வட கொரியாவும், அமெரிக்காவும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை என்றே கூறி வருகிறது.

தென் கொரியாவின் நிபுணர் ஒருவர் கூறுகையில் ”இது நிச்சயம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் முதல் கட்ட பரிசோதனையே. நிச்சயம் வட கொரியா இத்தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் ஏவுகணை திட்டம் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது” என்றார்.

இதனிடையே தென் கொரியாவில் அமெரிக்க வைத்துள்ள (ஏவுகணை எதிர்ப்பு) ராடார் வசதிக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது சீனாவின் நகரங்களை உளவு பார்க்கவே வைக்கப்பட்டுள்ளது என்று அது குற்றம்சாட்டுகிறது. சீனாவிற்கு ஆதரவாக ரஷ்யாவும் குரல் கொடுத்து வருகிறது, இரு தரப்பும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைகளை துவக்க உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிறது சீனா.