சீனாவில் இரண்டு தங்கச்சுரங்கங்களில் விபத்து: 10 பேர் பலி


சீனாவில் இரண்டு தங்கச்சுரங்கங்களில்  விபத்து: 10 பேர் பலி
x
தினத்தந்தி 25 March 2017 6:37 AM GMT (Updated: 25 March 2017 6:36 AM GMT)

சீனாவில் இரண்டு தங்கச்சுரங்கங்களில் ஏற்பட்ட வாயு கசிவில் 10 தொழிலாளர்கள் பலியாகினர்.

பெய்ஜிங்,

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில்  கனிமங்களை வெட்டி எடுக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. ஹெனான் மாகாணத்தின் லிங்காபோ நகரில் இயங்கி வந்த குயின்லிங் தங்கச் சுரங்கத்தில் நேற்றிரவு திடீரென கார்பன் மோனாக்சைட் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயுவில் சிக்கி மூச்சுத் திணறிய 8 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதேபோல், அருகாமையில் உள்ள மற்றொரு சுரங்கத்திலும் நேற்று ஏற்பட்ட விஷவாயுக் கசிவில் மேலும் இரு தொழிலாளிகள் பலியாகினர்.

சீனாவில் பல்வேறு நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய முன்அனுமதி பெற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன. பல சுரங்கங்கள் முன்அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன.

Next Story