ஆடு ஈன்ற பாதி மனிதன் - பாதி ஆடு போன்ற அதிசய பிறவி பொதுமக்கள் பீதி


ஆடு ஈன்ற பாதி மனிதன் - பாதி ஆடு போன்ற அதிசய பிறவி பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 23 Jun 2017 6:51 AM GMT (Updated: 23 Jun 2017 6:51 AM GMT)

தென் ஆப்பிரிக்காவில் ஆடு ஒன்றிற்கு பிறந்த குட்டி பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் பிறந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.





தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் Chris Hani மாவட்டத்தில் அமைந்துள்ளது லேடி பிரரி என்ற கிராமம். இங்கு 4,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு ஆடு ஒன்றிற்கு பாதி மனிதன் மற்றும் பாதி ஆடு போன்ற உடலமைப்புடன் குட்டி ஒன்று பிறந்துள்ளது.

இதைக் கண்ட அக்கிராம மக்கள் இதை தீய சக்தி தான் அனுப்பியுள்ளது என்று கூறியதால், அங்கு பீதி நிலவியது.

அதன் பின் இது தொடர்பான தகவல் அங்குள்ள கிராமப்புற வளர்ச்சி அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் Lubabalo அதை சோதனை செய்துள்ளார்.

அவர் கூறுகையில், இது கண்டிப்பாக ஆட்டிற்கு பிறந்தது தான் என்றும், இதில் மக்கள் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் இந்த குட்டி பிறக்கும் போதே இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இக்குட்டி ஆட்டின் வயிற்றில் இருந்த போது நோய் வாய்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதன் தாய் ஆடானது ரிப்ட் வேலி என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நோயின் தாக்கம் காரணமாகவே இக்குட்டி இது போன்ற உடலைப்புடன் பிறந்துள்ளது.

அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறியும் மக்கள் நம்பாத காரணத்தினால் அந்த ஆட்டுக் குட்டியின் பிரேத பரிசோதனையின் அறிக்கையை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story