செந்தூரம் பூசுவது ஏன்?


செந்தூரம் பூசுவது ஏன்?
x
தினத்தந்தி 27 Dec 2016 10:14 AM GMT (Updated: 27 Dec 2016 10:14 AM GMT)

சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்த அனுமன், அதுபற்றி அவரிடம் கேட்டார்.

சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்த அனுமன், அதுபற்றி அவரிடம் கேட்டார். ‘தாயே! தாங்கள் நெற்றில் செந்தூரம் வைத்துக்கொள்ள என்ன காரணம்?’.

‘எனது கணவர் ராமபிரான் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே, என்னுடைய நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்கிறேன்’ என்று பதிலளித்தார் சீதாதேவி. அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டாராம்.

இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும், எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். அந்த செந்தூரத்தையே, அனுமனின் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

Next Story