மழைக்காலத்தில் இரும்பு கதவு பாதுகாப்பு


மழைக்காலத்தில்  இரும்பு  கதவு  பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 Oct 2017 10:00 PM GMT (Updated: 20 Oct 2017 12:37 PM GMT)

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ‘மெயின் கேட்’ ஒவ்வொரு நாளும் வெயில், மழை மற்றும் பனி ஆகிய இயற்கை பாதிப்புகளால் உறுதி தன்மையை இழக்கிறது.

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ‘மெயின் கேட்’ ஒவ்வொரு நாளும் வெயில், மழை மற்றும் பனி ஆகிய இயற்கை பாதிப்புகளால் உறுதி தன்மையை இழக்கிறது. பொதுவாக, பல இடங்களில் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கதவுகள் மற்றும் ‘கேட்டுகள்’ பராமரிப்பில் சரியான கவனம் செலுத்தப்படுவதில்லை என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வரவேற்கும் கதவுகள்

வீடுகள் அல்லது குடியிருப்புகளுக்குள் நுழையும்போது முதலில் கண்களில்படுவது மெயின் கேட் மற்றும் நுழைவாசலில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கதவுகள்தான். அவற்றின் தோற்றம் அழகாக இருக்கும்பட்சத்தில் வீட்டை பற்றிய அவர்களது மதிப்பு அதிகரிக்கும் என்பது பலரது கருத்தாக உள்ளது.   

துரு பாதிப்பு

கட்டிடங்களின் வெளிப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு கதவுகள் நீடித்து உழைப்பதோடு, நல்ல தோற்றமும் கொண்டிருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். அதன் முதல் படியாக, அவற்றை துரு பாதிப்பில் இருந்து தடுப்பது முக்கியம். இரும்பு பொருட்களை பாதுகாக்க அவற்றை எப்போதும் ஈரம் மற்றும் வெயில் ஆகியவை நேரடியாக படியாமல் கவனித்துக்கொள்ளவேண்டும்ஆனால், வெளிப்புற கதவுகளுக்கு இந்த முறை சாத்தியமாவதில்லை.

புதிய அறிமுகம்

இரும்பு கதவுகளை பாதுகாக்கவும், எளிமையாக பராமரிக்கவும் சந்தையில் இப்போது எபாக்ஸி பிரைமர் வகைகள் அறிமுகமாகி இருக்கின்றன. வழக்கமான பெயிண்டு வகைகளை விடவும் இவ்வகை எபாக்ஸி பிரைமர்கள் நன்றாக செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது.

ரசாயன முறை

இரும்பு கதவுகள் உள்ளிட்ட இதர உலோக கட்டிட பொருட்களை பாதுகாப்பதோடு, கதவுகளின் மேற்பரப்பில் ஏற்படும் கீறல் போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது. உலோகத்தில் ஏற்படும் அரிப்பை தடுக்கும் ரசாயன முறையிலான தொழில்நுட்பம் கொண்டதாக எபாக்ஸி பிரைமர்கள் உள்ளன.

பாதுகாப்பு கோட்டிங்

உலோக பொருட்களின் மேற்பரப்பில் மெல்லிய பிலிம் போன்ற பாதுகாப்பு கோட்டிங்கை இவ்வகை பிரைமர்கள் ஏற்படுத்துகின்றன. பல்வேறு சோதனைகள் மூலம் அதன் உறுதி மற்றும் நீடித்த தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடும் வெயில், பலத்த மழை போன்ற சுற்றுப்புற காரணிகளிலிருந்து இரும்பு கதவுகளை பாதுகாக்க இவ்வகை பிரைமர்கள் உதவுகின்றன.

Next Story