பசுமையான நடைபாதைக்கு புதுமையான ‘பேவர் பிளாக்ஸ்’


பசுமையான  நடைபாதைக்கு  புதுமையான  ‘பேவர்  பிளாக்ஸ்’
x
தினத்தந்தி 20 Oct 2017 9:30 PM GMT (Updated: 20 Oct 2017 12:40 PM GMT)

வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்புற சாலையிலிருந்து உள்நுழைவதற்கு அமைக்கப்படும் நடை பாதைகளில்

வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளிப்புற சாலையிலிருந்து உள்நுழைவதற்கு அமைக்கப்படும் நடை பாதைகளில் விதவிதமான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் கான்கிரீட் பேவர் கற்கள் பதிக்கப்படுவது வழக்கம். நடைபாதை முழுவதும் அவை இடைவெளி இல்லாமல் மூடப்பட்டிருக்கும்.  

வடிவமைப்பு

மேற்கண்ட பேவர் கற்கள் வகைகளில் ‘கிராஸ் பேவர்’  எனப்படும் பசும்புல் பேவர் கற்கள் என்ற வகையும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, பசுமையான புல் வகைகள் ஆங்காங்கே வளரும் வகையில் தக்க இடைவெளிகள் கொண்டவாறு வடிவமைக்கப்பட்டவை கிராஸ் பேவர் ஆகும்.

அழகான தரைப்பரப்பு

இவ்வகை கற்கள் கான்கிரீட் மற்றும் ‘ரீ–சைக்கிள்டு பிளாஸ்டிக்’ போன்றவற்றாலும் தயார் செய்யப்படுகின்றன. புல்லின் வேர்கள் வளர்வதற்கு எவ்விதமான தடைகளும் ஏற்படுத்தாத வகையில் தரைப்பரப்பில் பரவலாக இவை அமைக்கப்படுகின்றன. தோட்டங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள மேடு பள்ளங்கள் மற்றும் பாதைகளின் வளைவுகள் ஆகிய பகுதிகளில் இவற்றை கச்சிதமாக அமைத்து அவற்றை அழகாக மாற்றலாம். நீளவாக்கில் உள்ள கற்களின் இணைப்புகளில் புல்லின் வேர் சுலபமாக கீழ்நோக்கி செல்வதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை.

பட்ஜெட்டுக்கு உகந்தது

இவ்வகை பேவர் கற்களில் பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் அதிகமில்லை. மேலும், இவற்றை தயாரிக்கும் நிறுவனங்களே பசுமையான புற்கள் வளர உதவும் ‘ஹைட்ரோ டிரைன்’ செல்களையும் தயாரித்து வழங்குகின்றன. மேலும், ‘பேவிங் சப்போர்ட் பேட்ஸ்’, செயற்கை புல்வெளி தரைகள், நெய்யப்படாத செயற்கை இழைகள், வீடு தோட்டத்திற்கான பர்னிச்சர் வகைகள் ஆகிய பசுமை தயாரிப்புகளும் இப்போது கிடைக்கின்றன.

Next Story