இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி முதலில் பேட்டிங்


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 19 Jan 2017 8:02 AM GMT (Updated: 19 Jan 2017 8:02 AM GMT)

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

கட்டாக்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பரபாதி ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.  இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆர்வம் காட்டி வருகிறது


இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விபரம் வருமாறு:- கே.எல். ராகுல், ஷிகர் தவான்,விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி, கே.எம் ஜாதவ், பாண்ட்யா, ஜடேஜா, அஷ்வின், பும்ரா, புவனேஷ் குமார்

இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:- ஜே ஜே ராய், ஏடி.ஹேல்ஸ், ஜே.ஈ ரூட், மோர்கன், பட்லர், ஸ்டோக்ஸ், எம்.எம். அலி, பிளங்கட், வோக்ஸ் வில்லே, ஜேடி பால்

Next Story