இந்திய அணியில் முகமது ‌ஷமி சேர்ப்பு


இந்திய அணியில் முகமது ‌ஷமி சேர்ப்பு
x
தினத்தந்தி 24 March 2017 11:45 PM GMT (Updated: 24 March 2017 6:59 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டெஸ்டில் பங்கேற்காத வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி கடைசி டெஸ்ட்டுக்கான இந்திய அணியினருடன் இணைந்தார்.

கால் முட்டி காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ‌ஷமி, பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்கின் ஆலோசனைப்படி பயிற்சி முறைகளை மேற்கொண்டார். ஆனாலும் அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முகமது ‌ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இஷாந்த் ‌ஷர்மாவுக்கு பதிலாக முகமது ‌ஷமி களம் காணுவார் என்று தெரிகிறது.

Next Story