ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
x
தினத்தந்தி 24 April 2017 10:15 PM GMT (Updated: 24 April 2017 8:07 PM GMT)

புனே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட யுவராஜ்சிங் இந்த ஆட்டத்தில் களம் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

விராட்கோலி கேப்டன் டேவிட் வார்னர்

இதுவரை நேருக்கு நேர்: 10

4 வெற்றி. 6 வெற்றி

நட்சத்திர வீரர்கள்

கெய்ல், கேதர் ஜாதவ், பவான் நெகி, டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், ஷேன்வாட்சன்

ஷிகர் தவான், கனே வில்லியம்சன், யுவராஜ்சிங், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், ஹென்ரிக்ஸ்

பெங்களூரு அணி தோல்வியில் இருந்து மீளுமா?

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை 7 ஆட்டத்தில் விளையாடி 2 ஆட்டத்தில் வெற்றியும், 5 ஆட்டத்தில் தோல்வியும் கண்டு 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

பலம் வாய்ந்த பெங்களூரு அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான விராட்கோலி (4 ஆட்டங்களில் 154 ரன்கள்), கெய்ல் (5 ஆட்டங்களில் 144 ரன்), டிவில்லியர்ஸ் (4 ஆட்டங்களில் 145 ரன்கள்) ஆகியோர் இந்த சீசனில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். நேற்று முன்தினம் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 49 ரன்னில் சுருண்டு 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்த அணி என்ற மோசமான சாதனையை பெற்ற பெங்களூரு அணியின் ஒரு பேட்ஸ்மேன்கள் கூட இந்த ஆட்டத்தில் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. இந்த மோசமான தோல்வியில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் பெங்களூரு அணி இருக்கிறது.

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐதராபாத் அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டாலும், வெளியூரில் வெற்றியை ருசிக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

வெளியூரில் முதல் வெற்றியை பெற ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி முழு வேகத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என்.)


Next Story