ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
x
தினத்தந்தி 27 April 2017 9:19 PM GMT (Updated: 27 April 2017 9:18 PM GMT)

இடம்: கொல்கத்தா, நேரம்: மாலை 4 மணி கவுதம் கம்பீர் கேப்டன் ஜாகீர்கான் நட்சத்திர வீரர்கள் சுனில் நரின், உத்தப்பா, மனிஷ்பாண்டே, யூசுப்பதான், நாதன் கவுல்டர்–நிலே, உமேஷ் யாதவ். =========== சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, ரிஷாப் பான

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– டெல்லி டேர்டெவில்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: மாலை 4 மணி

கவுதம் கம்பீர் கேப்டன் ஜாகீர்கான்

நட்சத்திர வீரர்கள்

சுனில் நரின், உத்தப்பா, மனிஷ்பாண்டே, யூசுப்பதான், நாதன் கவுல்டர்–நிலே, உமேஷ் யாதவ்.

சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, ரிஷாப் பான்ட், ரபடா

--–

இதுவரை நேருக்கு நேர் 18

11 வெற்றி 7 வெற்றி

--–

கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஏற்றம் இறக்கமின்றி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. கேப்டன் கவுதம் கம்பீர் (3 அரை சதத்துடன் 305 ரன்), ராபின் உத்தப்பா (3 அரைசதத்துடன் 272 ரன்), மனிஷ் பாண்டே (260 ரன்), யூசுப்பதான் ஆகியோர் பேட்டிங்கிலும், சுனில் நரின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் கைகொடுக்கிறார்கள். நேற்று முன்தினம் புனே சூப்பர் ஜெயன்ட்டுக்கு எதிரான ஆட்டத்தில் கூட 183 ரன்கள் இலக்கை எளிதாக சேசிங் செய்து விட்டார்கள். சொந்த ஊரில் ஆடுவதால் கொல்கத்தா ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் 2–ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சியது. நெருங்கி வந்து கடைசி கட்டத்தில் சறுக்கி விடும் டெல்லி அணி, இந்த வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், தோல்விப்பாதையில் இருந்து மீளலாம். ஏற்கனவே தங்களது ஊரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது. அதற்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்– ஐதராபாத் சன்ரைசர்ஸ்

இடம்: மொகாலி, நேரம்: இரவு 8 மணி

மேக்ஸ்வெல் கேப்டன் டேவிட் வார்னர்

நட்சத்திர வீரர்கள்

மனன் வோரா, அம்லா, அக்‌ஷர் பட்டேல், ஷான் மார்ஷ், விருத்திமான் சஹா, டி.நடராஜன்

--–

ஷிகர் தவான், வில்லியம்சன், ஹென்ரிக்ஸ், யுவராஜ்சிங், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், தீபக் ஹூடா

--–

இதுவரை நேருக்கு நேர் 9

7 வெற்றி 2 வெற்றி

=============

வெளியூர் தோல்விக்கு முடிவு கட்டுமா ஐதராபாத்?

நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வி என்று 9 புள்ளிகளை சேர்த்துள்ளது. உள்ளூரில் அசைக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணிக்கு 4 வெற்றிகளும் சொந்த ஊரில் (ஐதராபாத்) கிடைத்தவை தான். அதே சமயம் வெளியூரில் தடுமாறும் ஐதராபாத் அணி, அந்த சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அடி வாங்கி பஞ்சாப் அணிக்கு குஜராத்துக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். ஏற்கனவே 5 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோற்றுள்ள பஞ்சாப் அணி, அதற்கு பழிதீர்க்க தீவிரம் காட்டும். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

(நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என்.)


Next Story