பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வங்காளதேச பயணம் தள்ளிவைப்பு


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வங்காளதேச பயணம் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 27 April 2017 9:23 PM GMT (Updated: 27 April 2017 9:22 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த போட்டி தொடரை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் வந்து இரண்டு ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடும்படி வங்காளதேச அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தது. அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலடியாக வங்காளதேச போட்டி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது. 2009–ம் ஆண்டில் பாகிஸ்தானில் பயணம் செய்து விளையாடிய இலங்கை அணியினர் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரர்கள் லேசான காயத்துடன் தப்பினார்கள். அதன் பின்னர் எல்லா அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story