நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கீப்பிங்கில் அசத்திய தோனி


நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கீப்பிங்கில் அசத்திய தோனி
x
தினத்தந்தி 29 May 2017 6:09 AM GMT (Updated: 29 May 2017 6:08 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அசத்தலாக ஸ்டம்பிங் செய்துள்ளார்.

லண்டன்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வென்றது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை போராடி தோற்கடித்தது. 

இந்த நிலையில் 3–வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் லண்டன் ஓவலில் நேற்று சந்தித்தன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கில் எப்போதும் அசத்தும் தோனி நேற்றைய போட்டியிலும் பிரமிக்கதக்க வகையில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்பவர் என்று கிரிக்கெட் வர்ணணையாளர்களால் பாராட்டப்படும்  தோனி நேற்று ஒரு ஸ்டம்பிங்கை செய்து தான் அந்த பெயருக்கு உரித்தானவர் என்பதை மெய்பித்து காட்டினார். 

நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 110 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. அப்போது கிராண்ட்ஹொம் பேட் செய்ய வந்தார். நெருக்கடியான தருணங்களில் அதிரடி காட்டுபவர் என்று கூறப்படும் கிரண்ட் ஹோம், அணியை சரிவில் இருந்து மீட்கும் பொருட்டு கிரீஸுக்கு வெளியே வந்து பந்தை அடிக்க முற்பட்டார். 

ஆனால்,ரவீந்தர் ஜடேஜா வீசிய பந்தை ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் தோனி ஸ்டம்பிங் செய்து அசத்தினார். தோனியின் செயல் நியூசிலாந்து வீரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தோனியின்  அதிவேக ஸ்டம்பிங் வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. தோனியின் ரசிகர்களும் வலைதளங்களில் அவரை கொண்டாடி வருகின்றனர். 

Next Story