இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் 53 பந்தில் சதம் அடித்தார், மொயீன் அலி


இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் 53 பந்தில் சதம் அடித்தார், மொயீன் அலி
x
தினத்தந்தி 24 Sep 2017 9:30 PM GMT (Updated: 24 Sep 2017 7:26 PM GMT)

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது.

பிரிஸ்டல்,

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 369 ரன்கள் குவித்தது. 7-வது வரிசையில் இறங்கிய மொயீன் அலி 53 பந்துகளில் சதத்தை எட்டினார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் 2-வது அதிவேக செஞ்சுரி இதுவாகும். அவர் 102 ரன்களில் (57 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் (73 ரன்), ஜோ ரூட் (84 ரன்) அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 39.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் 94 ரன்களில் (78 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஆட்டம் லண்டனில் 27-ந்தேதி நடக்கிறது.

Next Story