இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பு


இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பு
x
தினத்தந்தி 16 Nov 2017 12:12 PM GMT (Updated: 16 Nov 2017 12:12 PM GMT)

இலங்கையுடன் முதல் டெஸ்ட் இந்தியா 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது. மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் போட்டி நிறைவுற்றது

இந்தியா- இலங்கை அணிகள் மோதல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. காலையில் பெய்த மழை காரணமாக, நண்பகல்தான் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலிலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.

அதன்படி இந்திய அணி வீரர்கள் கே.எல்.ராகுலும், தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் பந்தை வீசிய லக்மல், ராகுலின் விக்கெட்டை வீழ்த்தினார். 6.2 வது ஓவரில் லக்மலே, தவானின் விக்கெட்டையும் சாய்த்தார்.  

மழை காரணமாக பிட்ச்சின் தன்மை மாறியுள்ளது. முதல் இரண்டு நாள், பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  புஜ்ரா 8 ரன்களுடனும்,கோலி ரன்கள்  எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தொடர்ந்து மழை குறுக்கிட்டதால்  போட்டி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர்  மழை நின்றதும் தொடர்ந்து இந்தியா விளையாடியது லக்மல் பந்தில்  எல்பி டபிள்யூ  முறையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். வெளிச்சம் காரணமாக  அத்துடன் முதல் நாள் போட்டி நிறைவுற்றது. புஜாரா (8), ரகானே (0) அவுட்டாகாமல் கலத்தில் உள்ளனர்.

இன்றைய முதல் நாள் போட்டியில் மழை, மோசமான வெளிச்சம் காரணமாக மொத்தமாகவே 11.5 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டது. இதனால் எஞ்சியுள்ள நாட்களில் வழக்கத்தை விட அரைமணி முன்னதாக துவங்கும் என அம்பயர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story