சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே வெற்றி


சீனியர் டிவிசன் லீக் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே வெற்றி
x
தினத்தந்தி 27 Feb 2017 9:45 PM GMT (Updated: 27 Feb 2017 8:33 PM GMT)

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் ஆதரவுடன் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

சென்னை,

இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 1–0 என்ற கோல் கணக்கில் சென்னை யுனைடெட் எப்.சி. அணியை தோற்கடித்தது. தெற்கு ரெயில்வே அணி தரப்பில் ஸ்வராஜ் 38–வது நிமிடத்தில் கோல் அடித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 2–0 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் லாலன் சங்கா 49–வது நிமிடத்திலும், ஒலட்சோ ஜோசப் 59–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் சென்னை சிட்டி எப்.சி.–ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 3 மணி), சென்னை எப்.சி.–ஐ.சி.எப் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story