சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி 100 கோல்கள் அடித்தார் ரொனால்டோ


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி 100 கோல்கள் அடித்தார் ரொனால்டோ
x
தினத்தந்தி 13 April 2017 8:02 PM GMT (Updated: 13 April 2017 8:02 PM GMT)

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

முனிச்,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் முனிச்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட்– பெயர்ன் முனிச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெயர்ன் முனிச் அணி வீரர் அர்டுரோ விடால் 25–வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். அதேநேரத்தில் அவர் ஒரு பெனால்டி வாய்ப்பை வீணடித்தார். ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 47–வது மற்றும் 77–வது நிமிடத்தில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கியதுடன், ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.


Next Story