நட்புறவு கால்பந்து: பிரேசிலை வென்றது அர்ஜென்டினா


நட்புறவு கால்பந்து: பிரேசிலை வென்றது அர்ஜென்டினா
x
தினத்தந்தி 9 Jun 2017 8:40 PM GMT (Updated: 9 Jun 2017 8:40 PM GMT)

முன்னாள் உலக சாம்பியன்கள் பிரேசில் – அர்ஜென்டினா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

மெல்போர்ன்,

முன்னாள் உலக சாம்பியன்கள் பிரேசில் – அர்ஜென்டினா அணிகள் இடையே நட்புறவு கால்பந்து போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது. 95 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 1–0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை அர்ஜன்டினா வீரர் கேப்ரியல் மெர்காடோ அடித்தார். அர்ஜென்டினா அணியில் லயோனல் மெஸ்சி இடம் பெற்றார். பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் ஆடவில்லை.


Next Story