ஆசிய கோப்பை கால்பந்து தகுதிசுற்று: கிர்கிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


ஆசிய கோப்பை கால்பந்து தகுதிசுற்று: கிர்கிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 13 Jun 2017 9:45 PM GMT (Updated: 13 Jun 2017 5:24 PM GMT)

ஆசிய கால்பந்து போட்டி 2019–ம் ஆண்டு அமீரகத்தில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

ஆசிய கால்பந்து போட்டி 2019–ம் ஆண்டு அமீரகத்தில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் 3–வது சுற்றில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஆசிய போட்டிக்கு தகுதி பெறும்.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மியான்மரை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி கிர்கிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றிக்குரிய கோலை 69–வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி அடித்தார். இதன் மூலம் இந்தியா தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா அடுத்து மக்காவ் அணியுடன் செப்டம்பர் 5–ந்தேதி மோதுகிறது.

Next Story