இந்திய கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம்? பிபா எச்சரிக்கை


இந்திய கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம்? பிபா எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2017 11:00 PM GMT (Updated: 4 Nov 2017 7:23 PM GMT)

இந்திய கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம்? (பிபா) கருத்து தெரிவித்து இருக்கிறது.

சூரிச்,

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் தேர்வு செய்ததை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது. அத்துடன் 5 மாதத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் முன்னாள் தலைமை கமிஷனர் குரேஷியை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமித்தது. இந்த சம்பவம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கருத்து தெரிவித்து இருக்கிறது.

அதில், ‘பிபா சட்டங்களின் படி உறுப்பினர் பெடரேஷன்கள் அந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியல் தலையீடு இன்றி சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் முறையாக கடைப்பிடிக்காத தேசிய சம்மேளனங்களை முன்பு ‘பிபா’ இடைநீக்கம் செய்து இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 அத்துடன் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவு விவரம் மற்றும் இந்த விஷயத்தில் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் எடுத்து இருக்கும் நடவடிக்கை விவரங்களையும் தெரிவிக்கும் படி பிபா கடிதம் மூலம் கேட்டு இருக்கிறது.

Next Story