மாநில ஆக்கி போட்டி தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி


மாநில ஆக்கி போட்டி தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 14 Feb 2017 8:52 PM GMT (Updated: 14 Feb 2017 8:52 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் திருநகர் கிளப் (மதுரை) அணி 1–0 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 6–2 என்ற கோல் கணக்கில் வெஸ்லி கிளப் (சென்னை) அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் சென்னை பல்கலைக்கழகம்–ஜி.கே.மோட்டார்ஸ் (மதுரை) அணியும் (பிற்பகல் 2 மணி), இந்தியன் வங்கி–திருநகர் கிளப் (மதுரை) அணியும் (பிற்பகல் 3.30 மணி) மோதுகின்றன.


Next Story