மாநில ஆக்கி போட்டி: கலால்வரி அணி ‘சாம்பியன்’


மாநில ஆக்கி போட்டி: கலால்வரி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 18 Feb 2017 9:03 PM GMT (Updated: 18 Feb 2017 9:03 PM GMT)

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

சென்னை,

வெஸ்லி ஆக்கி கிளப் சார்பில் டி.எஸ்.ராஜமாணிக்கம் நினைவு 2–வது மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மத்திய கலால் வரி அணி 3–0 என்ற கோல் கணக்கில் வருமானவரி அணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஜான், பாலாஜி, ஹசன் பாஷா ஆகியோர் கலால் அணியில் கோல் போட்டனர். முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழக அணி 4–0 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது.

பட்டம் வென்ற கலால் அணிக்கு ரூ.1 லட்சமும், 2–வது இடத்தை பிடித்த வருமானவரி அணிக்கு ரூ.70 ஆயிரமும், 3–வது இடத்தை பெற்ற சென்னை பல்கலைக்கழக அணிக்கு ரூ.50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் ஆக்கி இந்தியா இணைச்செயலாளர் ரேணுகா லட்சுமி, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாஸ்கரன், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story