உலக ஆக்கி லீக் போட்டி இந்திய பெண்கள் அணி அறிவிப்பு


உலக ஆக்கி லீக் போட்டி இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 9 March 2017 11:00 PM GMT (Updated: 9 March 2017 7:31 PM GMT)

உலக பெண்கள் ஆக்கி லீக் 2–வது சுற்று போட்டி கனடாவில் ஏப்ரல் 1–ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சர்ச்சை காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நடுகள வீராங்கனை ரிது ராணி மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்திய அணி வீராங்கனைகள் வருமாறு:–

சவிதா, ரஜனி எடிமர்பு (கோல் கீப்பர்கள்), தீப் கிரேஸ் எக்கா, சுனிதா லக்ரா, குர்ஜித் கவுர், ரேணுகா யாதவ், லால்குன்மாவி (பின்களம்), தீபிகா, நவ்ஜோத் கவுர், ரிது ராணி, மோனிகா, லில்லி சானு மயெங்பாம், நமிதா (நடுகளம்), ராணி, வந்தனா கடாரியா, பூனம் ராணி, சோனிகா, அனுபா பார்லா (முன்களம்).


Next Story